Thursday, April 28, 2011

இந்திய அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் நியமனம்
வீரகேசரி இணையம் 4/27/2011 4:08:16 PM -கேரி கிர்ஸ்டனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பல நாட்களாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

பிளட்சர் சிம்பாப்வேயைச் சேர்ந்தவர். 1999இல் இருந்து 2007 வரை இங்கிலாந்து அணிக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார்.

பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டத்தில் பிளட்சரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. பிளட்சர் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார். அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த சில பணிகளை செய்யவேண்டி இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணியுடன் அவர் சேர்ந்துகொள்ள முடியாமல் போகலாம் என பிசிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

கிர்ஸ்டனின் பதவிக்காலத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எரிக் சைமன்ஸ், அதே பதவியில் தொடர்வார் என அவர் குறிப்பிட்டார்.

பிளட்சர் 1983 உலகக் கோப்பை போட்டியின்போது சிம்பாப்வே அணியின் கப்டனாக இருந்தவர். சர்வதேச அளவில் 6 ஒரு நாள்; போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார்.

No comments:

Post a Comment